தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை
5.4.4 பௌதீக விஞ்ஞானப் பிரிவு
தீவகத்தில் வேலணை மத்திய கல்லூரி, ஊர்காவற்றுறை புனித அந்தோணியார் கல்லூரி, காரைநகர் யாழ்ரன் கல்லூரி ஆகிய மூன்று பாடசாலைகளில் மட்டுமே உயர்தரப் பிரிவில் பௌதீக விஞ்ஞானம் கற்பிக்கப்படுகின்றது.
ஊர்காவற்றுறை புனித அந்தோணியார் கல்லூரியில் இருந்து 2014 ஆம் பரீட்சைக்குத் ஒரேயொரு மாணவன் தோற்றியிருந்தார். அவர் பல்கலைக் கழக அனுமதிக்குத் தகுதி பெற்றிருந்தார். 2015 ஆம் ஆண்டில் இப்பாடசாலையில் இருந்து இப்பரீட்சைக்கு பௌதீக விஞ்ஞானத்துறையில் ஒருவரும் தோற்றவில்லையென்பது கவனத்தில் கொள்ள வேண்டியதொன்றாகும்.
வேலணை மத்திய கல்லூரியைப் பொறுத்த வரையில் பௌதீக விஞ்ஞானத்துறையில் 2014 ஆம் ஆண்டில் ஒருவரும் 2015 ஆம் ஆண்டில் மூவரும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களுள் 2014 ஆம் ஆண்டு தோற்றியவர் பல்கலைக் கழக அனுமதிக்கு தகைமை பெறாத அதேவேளையில் 2015 ஆம் ஆண்டு தோற்றிய மூவரில் ஒருவர் தகைமை பெற்றிருந்தார்.
காரைநகர் யாழ்ரன் கல்லூரியைப் பொறுத்த வரையில் 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் உயர்தரப் பிரிவில் பௌதீக விஞ்ஞானத்துறையில் முறையே இருவரும் ஒருவரும் தோற்றியிருந்தனர். அவர்கள் அனைவரும் பல்கலைக் கழக அனுமதிக்கு தகைமை பெற்றிருக்கவில்லை.
6.0 தீவுப் பகுதியில் கல்விப் பெறுபேறுகள் மோசமானதாக அமைய ஏதுவான காரணங்கள்
தீவக வலயத்திலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர் விகிதம்1:15 ஆக அமைகின்றது. பொதுவாக நோக்கும்பொது இந்த விகிதம் சிறப்பானதாகத்தென்பட்ட போதிலும் பாடரீதியாக எடுத்து நோக்கும்போது ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. தீவகப்பிரதேசத்தில் இப்பாடங்களில் மாணவர் பெறுபேற்று வீழ்ச்சிக்கு இது காரணமாக அமையலாம்.
தீவகத்தில் உள்ள ஓரளவு வசதியானவர்களும் அரச உத்தியோகத்தர்களும் தமது பிள்ளைகளை யாழ்ப்பாணத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்க அனுப்புகின்றனர். இப்பிள்ளைகள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுவதானது தீவக வலயத்தின் கல்விப் பெறுபேற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
மேலும் தீவகத்தில் வாழும் மக்களில் சுமார் 20 சதவீதமானோர வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். இந்த மக்களால் தமது பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த முடியதில்லையென பேராசிரியர் குகபாலன் (1994) குறிப்பிடகின்றார்.
தீவக வலயத்தில் உள்ள பெருன்பாலான பாடசாலைகளில் உரிய கட்டட வசதிகள், ஆய்வுகூட வசதிகள், தளபாடங்கள் என்பன காணப்படாமை மாணவரின் கற்றலைப் பாதித்து அவர்களின் பெறுபேற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
7. தீவகக் கல்விக் கோட்டப் பாடசாலைகளின் கல்விP மேம்பாட்டிற்கான சிபாரிசுகள்
தீவகக் கல்வி வலயத்தில் உள்ள நான்கு கோட்டங்களுள் காரைநகரக் கோட்டத்திலேயே ஒப்பீட்டு ரீதியாக உயர்ந்த பெறுபேறுகள் காணப்படுகின்றன. எனினும் எதிர் காலத்தில் காரைநகர்க் கோட்டமானது வலிகாமக் கோட்டத்துடன் இணைக்கப்படும் பட்சத்தில் தீவக கல்வி வலயத்தின் பொதப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்னும் மோசமான சதவீதங்களைக் காட்டுமென்பதில் ஐயமில்லை. இந்தப் பின்புலத்தில் தீவகப் பிரதேசத்தில் தற்போது காணப்படும் மோசமான கல்வி நிலையைச் சிர்செய்வதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்த ஆய்வு முன்மொழிகின்றது.