வேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017
வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறணாய்வு போட்டி 2017 நிகழ்வுகள் பாடசாலையின் முதல்வர் தலமையில் 23/02/2017 நேற்று பகல் 1மணியளவில் பாடசாலையின் முற்றத்தில் நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வட மாகாண சபையின் உறுப்பினர் திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ் மெய்வல்லுனர் திறணாய்வு போட்டிக்கு வேலணை மக்கள் ஒன்றியம் அனுசரணை வழங்கியதுடன், விருந்தினர்களுடன் வேலணை மக்கள் ஒன்றியத்தின் சார்பாக இவ்வொன்றியத்தின் தலைவர் திரு.அரசரெத்தினம் அவர்களும் உப செயலாளர் திரு ப.காண்டிபன் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.