Sitpanai Murugan -சிற்பனை முருகன் ஆலயம்
சிற்பனை ஆலயம் 1880களுக்கு முன்னர் வேலணைக் கிராமத்தில் இருந்த முருகன் ஆலயங்களுள் பள்ளம் புலம் முருகமூர்த்தி ஆலயத்திற்கு அடுத்து பழமை வாய்ந்தது. இவ்வாலய வரலாறு பற்றி தெளிவான ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கும் தகவல்கள் தரவுகளைக் கருத்திற் கொண்டு நோக்குமிடத்தில் இவ்வாலயம் கந்தபுராண படிப்பு மடமாக இருந்து பின்னர் இம்மடம் ஆலய வடிவம் பெற்றிருக்கிறது. இவ் வாலயத்தை நிறுவுவதற்கும், தக்கவைப்பதற்கும் இக்கிராமத்து மக்கள் பெரும் அர்ப்பணிப்பு செய்திருக்கின்றார்கள். 19, 20ஆம் நூற்றாண்டில் , இவ்வாலயத்தின் வளர்ச்சியுடன் திரு. கந்தவுடையார், திரு. சுப் பிரமணிய விதானையார், திரு வைத் தியநாதர் செல்லையா, திருமதி. கார்த்திகேசு இலட்சுமிப்பிள்ளை, திரு. துரையப்பா பொன்னம்பலம், திரு. வைத்தியநாதர் செல்லையாவின் மகன் திரு. வை. செ. சோமாஸ்கந்தண், திரு. வா. அருணகிரி ஆகியோர் பெரும் பங்காற்றி உள்ளனர். ஆலயத்தை இன்றைய அமைப்பிற்கு கொண்டு வந்ததில் அமரர் அருணகிரியின் பங்கு மிகப் பெரிய தொன்றாகும்.
இம் முருகன் ஆலயம் வேலணை மேற்கில் சிறப்புற வளர்ச்சி பெற்று வந்தபொழுது 1990களில் ஏற்பட்ட இடப்பெயர்ச்சியால் தளர்வுற்றபோதும் மீள் குடியேற்றத்துடன் இன்று பல வழிகளில் வளர்ச்சி கண்டு வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். வருடாந்த உற்சவம் முக்கிய சமய நிகழ்வுகள் சிறப்புற நடைபெறத் தொடங்கிவிட்டன. ஆலய செயற்பாட்டில் கிராம மக்கள் முழுமையாகப் பங்கு கொள்ளும் நிலையைக் காண முடிகின்றது. ஆலயம் ஆலய பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்டு வருவதும், திரு. வை. செ. சோமாஸ்கந்தன் ஆயுட்கால தலைவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.