வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பின்னூட்டல் வகுப்புகள் ஆரம்பம்.
வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன், இவ்வருடம் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள, வேலணைப் பிரதேசத்தைச்சார்ந்த மாணவர்களின், கல்வி அடைவுமட்ட வீதத்தை அதிகரிப்பதற்காக நடத்தப்படும் பின்னூட்டல் வகுப்புக்களுக்கான அங்குரார்ப்பணநிகழ்வு இன்று(Oct 6th,2017) பி.ப 2.00 மணியளவில் வேலணை மேற்கு நடராஜவித்தியாலயத்தில் நடைபெற்றது.
வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு அரசரெட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வகுப்புக்களை நடாத்தவிருக்கின்ற வளவாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். விஞ்ஞானம், வரலாறு, தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான பயிற்சிவகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கணிதபாடத்திற்கான பின்னூட்டல் வகுப்புகள் ஏற்கனவே வேறு செயற்திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கும் இப்பின்னூட்டல் வகுப்புகள் குறித்த நேரசூசிகையின் அடிப்படையில் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பின்னூட்டல் வகுப்புக்களை அனுபவம்வாய்ந்த வளவாளர்கள் நடத்தவுள்ளனர்.
இதற்கு முன்னர் வேலணை மக்கள் ஒன்றியம் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் பயிற்சிவகுப்புகளை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.