தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 66% மான மாணவர்கள் 70% புள்ளிக்கும் அதிகமாகப்பெற்றுள்ளனர்
வேலணைமக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை க்கு தோற்றியமாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டன இவ்வகுப்புக்களில் வேலணைப்பிரதேசத்தைச்சார்ந்த 90 மாணவர்கள் கலந்து கொண்டனர் இவர்களில் அண்மையில் வெளிவந்த பெறுபேறுகளின்படி 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 66% மான மாணவர்கள் 70 புள்ளிக்கும் அதிகமாகப்பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இவர்களுக்கு வேலணைமக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இவ்வகுப்புக்களை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் அனைத்துவழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய தீவகவலயக்கல்விப்பணிமனையின் ஆரம்பக்கல்வி ஆசிரியஆலோசகர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.