வேலணை மக்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக மேலும் இரு பிள்ளைகளுக்கு தாதிய உதவியாளர் பயிற்சி
ஊரையும் தாண்டிய சிறப்பான பணிகளில் வேலணை மக்கள் ஒன்றியம்.
கல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் தொடர்ச்சியாக எமது உறவுகள்.
ஆம் இம்முறை வன்னியில் இருந்து யுத்தத்தில் இழப்புகளைச் சந்தித்த குடும்பங்களைச் சேர்ந்த இரு பிள்ளைகள் தாதிய உதவியாளர் பயிற்சி படிக்க வேலணை மக்கள் ஒன்றியம் உதவி செய்துள்ளார்கள்.
2ம் கட்டை, முரசுமோட்டை,பரந்தனைச் சேர்ந்த திருமதி.லோஜனன் கைலைராணி,நாகேந்திரபுரம் புளியம்பொக்கனையைச் சேர்ந்த செல்வி.திருநாமம் சர்மிளாதேவி தாதிய உதவியாளர் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளார்கள்.நிச்சயமாக இப் பிள்ளைகள் பயிற்சியின் முடிவில் வைத்தியத் துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய கௌரவமான வேலைக்கு செல்வார்கள்.
இப் பிள்ளைகளின் குடும்பத்தினர் சார்பில் மக்கள் ஒன்றியத்திற்கு நன்றிகள்.
இவர்களைப் போல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னும் பல பிள்ளைகள் வன்னியில் இருந்து தாதிய உதவியாளர் பயிற்சி கற்று நல்ல சம்பளத்துடன் கூய வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பற்ற காத்திருக்கிறார்கள்.
நீங்கள் உதவி செய்தால் இவர்களின் குடும்பங்களின் வாழ்விலும் ஒளி வீசும்.
தொடர்பு கொள்ள
Dr.Y.Yathunanthanan
0094773203137
0094773164617