யாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி
யாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி செய்யப்பட்டது.
17/02/2017 இன்று யாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாணசபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபாய் 100,000/= பணத்தினை வழங்கியுள்ளார்.
இவ் நிதியின் மூலம் பாடசாலைக்கு மேலத்தேய அணிநடைக்குரிய வாத்தியக்கருவிகளும் விளையாட்டு நிகழ்வுக்குரிய வெற்றிப்பீடம் மற்றும் விருந்தினர் உரையாற்றும் பீடமும் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரெத்தினம் அவர்களால் உத்தியோக ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
இன்நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு வாகீசன் அவர்களும், ஆசிரிய குழுவினரும், மாணவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் நிதியுதவியை செய்த வட மாகாணசபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.
நன்றி
வெற்றிககேடயங்களினை வெற்றிப்பீடம் என மாற்றுங்
– —- அதிபர் ந. வாகீசன்
We have corrected the error. Thank you for your valuable comments. Thanks.
சிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்