வேலணை மக்கள் ஒன்றியம் தாயகத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேசத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இங்கிருக்கும் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி வாழ்வாதார உதவிகளையும் கருத்தில் கொண்டு இவ் நிறுவனம் ஆரம்பிக்கப்படுகின்றது.
இவ் நிறுவனமானது இன மத சாதி வேறுபாடற்று நடு நிலையாக நின்று எல்லோருக்கும் உதவுவோம் .எல்லோரையும் வாழவைப்போம் என்றஇலக்கோடும் எம்ஊரை வளமாக்குவோம் என்ற எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ” எல்லோருக்கும் உதவுவோம் .எல்லோரையும் வாழவைப்போம் “இதற்கான நிதியனுசரனையை புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகளும் .அவர்கள் அங்கம் வகிக்கும் அமைப்பு மற்றும் ஒன்றியங்களும் உதவுவதற்கு முன் வந்துள்ளதுடன் .தாயகத்தில் வாழும் செல்வந்தர்களும் உதவி செய்யவுள்ளனர் .
அத்துடன் தொழில் சார் வல்லுனர்களின் ஆலோசனைகளுடனும் வழிகாட்டலுடனும் எமது வேலணையூர் மக்கள் ஒன்றியம் பயனிக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகின்றோம்.
மேலதிக தகவல்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை ஒருங்கிணைப்பு குழுவினர் அறியத்தருகின்றனர்.
தங்களின் ஆரோக்கியமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.
நன்றி
ஒருங்கிணைப்பு குழுவினர்
வேலணை மக்கள் ஒன்றியம்