தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை
வேலணைக் கல்விக் கோட்டத்திலுள்ள க.பொ.த. (சா.த.) வகுப்புக்கள் காணப்படும் 14 பாடசாலைகளில் இருந்து 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாள 30 சதவீதமானோரே உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். மேலும் உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பாடங்களைக் கற்பதற்குத் தகைமை பெற்ற மாணவர்களின் சதவீதமானது இவ்விரு ஆண்டகளிலும் முறையே 14.8 ஆகவும் 20.2 ஆகவும் காணப்படுகின்றன. இப்பெறுபேறுகள் திருப்தியளிக்கக் கூடியவையல்ல.
காரைநகர் கல்விக் கோட்டத்தில் தற்போது இயங்குகின்ற 13 பாடசாலைகளில் 1AB வகைப் பாடசாலைகளான காரைநகர் இந்துக் கல்லூரி, காரைநகர் யாழ்ரன் கல்லூரி ஆகியவற்றிலும் வகைப் பாடசாலைகளான சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம், காரை வியாவில் சைவவித்தியாலயம் ஆகியவற்றிலுமாக மொத்தமாக நான்கு பாடசாலைகளில் மட்டுமே சாதாதர வகுப்புக்கள்
காணப்படுகின்றன. இம்நான்கு பாடசாலைகளில் இருந்தும் 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் பரீட்சைக்குத் தோற்றியொரில் முறையே 45, 42.5 சதவீதமானோர் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 25, 28.4 சதவீதமானோர் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பாடங்களைக் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்த தீவகத்துடன் ஒப்பிடும்போது இவை திருப்தியாக அமைந்தாலும் இப்பெறுபேறுகள் போதுமானவையாக அமையவில்லையென்றே கூறவேண்டியுள்ளது.
5.3.2 பாடரீதியான பெறுபேறுகள்
தீவகக் கல்வி வலயத்தின் க.பொ.த. (சா.த.) பெறுபேறுகளை மேலே நோக்கப்பட்டது. இப்பெறுபேறுகளை தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம், வரலாறு, ஆங்கிலம் ஆகிய முக்கிய பாடங்களின் அடிப்படையில் அட்டவணை 5 காட்டுகின்றது.
அட்டவணை 7 தீவகக் கல்வி வலயத்தில் முக்கிய பாடங்களில் சித்தியடைந்தோரும் சதவீதமும்
பாடம் | 2014 | 2015 | ||
எண்ணிக்கை | சதவீதம் | எண்ணிக்கை | சதவீதம் | |
தமிழ் | 409 | 71.63 | 523 | 73.46 |
கணிதம் | 212 | 37.19 | 273 | 38.34 |
விஞ்ஞானம் | 168 | 29.42 | 283 | 39.97 |
வரலாறு | 306 | 53.59 | 283 | 53.30 |
ஆங்கிலம் | 43 | 7.53 | 66 | 9.31 |
(மூலம்: வடக்கு மாகாண கல்வித் திணைக்கள இணையத்தளம் 2016)
மேலேயுள்ள அட்டவணையின்படி தீவககல்வி வலயத்தில் ஆங்கில பாடத்தின் சித்தி வீதமானது மிகவும் மோசமானதாகக் காணப்படகின்றது. அதாவது 2014 ஆம் ஆண்டில் 7.53% ஆனோரும் 2015 ஆம் ஆண்டில் 9.31ம% ஆனோரும் சித்தியடைந்துள்ளனர். அதாவது பரீட்சைக்குத் தோற்றிய ஒவ்வொரு 100 பேரிலும்; 10 இற்கும் குறைவானோரே சித்தியடைந்துள்ளமை இற்கு குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் கணித, விஞ்ஞான பாடங்களில் மாணவரின் பெறுபேறும் திருப்திகரமாக அமையவில்லையென்பதை இவ்வட்டவணை காட்டுகின்றது. வரலாறு பாடத்தில் 50 சதவீதத்திற்கு அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். எனினும் இது போதுமானதல்ல. தமிழ் மொழியில் 70 சதவீததத்pற்கு அதிகமானவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இப்பேறுகள் கோட்ட ரீதியாக கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.
அட்டவணை 8 தீவகக் கல்விக் கோட்டப் பாடசாலைகளின் க.பொ.த. (சா. த) பெறுபேறுகள்
நெடுந்தீவு | ஊர்காவற்றுறை | வேலணை | காரைநகர் | |||||||||||||
2014 | 2015 | 2014 | 2015 | 2014 | 2015 | 2014 | 2015 | |||||||||
எ | % | எ | % | எ | % | எ | % | எ | % | எ | % | எ | % | எ | % | |
தமிழ் | 36 | 64 | 36 | 69 | 108 | 72 | 140 | 81 | 183 | 69 | 216 | 64 | 82 | 82 | 131 | 87 |
கணிதம் | 17 | 30 | 17 | 33 | 63 | 42 | 73 | 41 | 89 | 34 | 115 | 34 | 46 | 46 | 68 | 45 |
விஞ்ஞானம் | 12 | 25 | 12 | 23 | 39 | 26 | 73 | 43 | 75 | 28 | 132 | 40 | 44 | 44 | 66 | 44 |
வரலாறு | 25 | 45 | 25 | 48 | 70 | 5 | 94 | 55 | 137 | 52 | 167 | 50 | 70 | 70 | 93 | 62 |
ஆங்கிலம் | 3 | 5 | 3 | 6 | 11 | 7 | 14 | 8 | 15 | 6 | 22 | 7 | 15 | 15 | 27 | 18 |
தீவகக் கல்வி வலயத்தில் உள்ள கோட்டங்களில் ஆங்கில பாடத்தின் சித்தி வீதம் மிகவும் குறைவான நிலையில் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை, காரைநகர் ஆகிய கோட்டங்களில் முறையே 5% 7%, 6% 15% ஆகிய மாணவர்களே ஆங்கில பாடத்தில் சித்தியடைந்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில்; நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை, காரைநகர் ஆகிய கோட்டங்களில் முறையே 6%, 8%, 7%, 18% ஆகிய மாணவர்களே ஆங்கில பாடத்தில் சித்தியடைந்துள்ளனர். இரண்டு வருடங்களிலும் மற்றைய கோட்டங்களுடன் ஒப்பிடும்போது காரைநகர்க் கோட்டத்தில் ஓரளவு முன்னேற்றகரமான பெறுபேறு உள்ளது உயர் கல்வி கற்றல், தொழில் வாய்ப்பு, மற்றவர்அவதானிக்கத்தக்கது.