வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018
இன்றையதினம் (22.6.2018) தரம்5 வகுப்புக்கான வேலணை மக்கள் ஒன்றியத்தின் சிறப்புக்கருத்தரங்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில் யாழ்பிரபல ஆசிரியர் திரு அன்பழகன் அவர்களும் திரு நிமலன் அவர்களும் வளவாளர்களாக கலந்துகொண்டனர் இக்கருத்தரங்கில் சுமார்175 மாணவர்களும் பெருமளவிலான பெற்றோர்களும் கலந்துகொண்டனர் முன்னதாக வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு அரசரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வேலணைப்பிரதேச செய்லர் வாழ்த்துரை நிகழ்த்தினார் தொடர்ந்து வேலணை மக்கள் ஒன்றியத்தின் காப்பாளர் திரு இளம்பிறையன் அவர்களின் அறிமுக உரையுடன் கருத்தரங்கு ஆரம்பமானது மாலை 2மணி தொடக்கம் 6 மணிவரை கருத்தரங்கு இடம்பெற்றது.