வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்
1996 மீள்குடியேற்றத்தின் பின்னர் :
1996 இல் மீளவும் எமது பிரதேச மக்கள் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். 1996 ஏப்பிரல் மாதத்தில் இருந்து மக்கள் குடியேறத் தொடங்கி விவசாய பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினர். இந்நிலையில் எமது ஆலயப்பகுதியிலும் மக்கள் குடியேறத் தொடங்கினர். 15 – 03 – 1998 எமது ஆலயத்தில் மகாசபைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 07 வருடகால இடை வெளியின் பின்னர் ஆலயப் புனரமைப்பு வேலைகள் நடைபெறத் தொடங்கின.
இக் கூட்டத்தில் 25 உறுப்பினர்கள் கொண்ட புதிய பரிபாலனசபை அமைக்கப்பட்டது.
இதன் தலைவராக திரு.பொ.அருண கிரிநாதன் அவர்களும் உபதலைவராக
திரு.ந. கணேசபிள்ளை அவர்களும் செயலாளராக திரு.க.பரமேஸ்வரன் அவர்களும் உபசெயலாளராக திரு.வி.சாம்பசிவம் அவர்களும் பொருளாளராக திரு.மு.மகேந்திரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
1998 ஆம் ஆண டில் இருந்து வழமை போல மகோற்சவம் நடைபெறத் தொடங்கியது. புலம்பெயர்ந்த காலத்தில் எமது கோயில் குருக்கள் பிரம்மபூர் இ. சோமஸ் கந்தக் குருக்கள் அவர்கள் ஆலயத்தில் தங்கியிருந்த 7 வருடங்களும் பிள்ளையாருக்கு நித்திய பூசை செய்து வந்தார். இது பிள்ளையாரின் பெருங் கருணையினால் ஆகும்.
இதன்பின்னர் ஒவ்வொரு வருடமும் மகாசபைப் பொதுக்கூட்டம் நடைபெற்று பரிபாலன சபை தெரிவு இடம்பெற்று வருகிறது. இப்பரிபாலன சபையினது காலத்தில் ஆலயத்தில் பெரும் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை
1.பஞ்சதள இராஜகோபுர வேலை பூர்த்தியடைந்துள்ளது.
2. வெள்ளைக்கல்லினால் கட்டப்பெற்ற புதிய தீர்த்தக்கேணி அமைக்கப்பட்டுள்ளது. – வேலணை மேற்கு முருகேசு – செல்லம்மா குடும்பம்.
3. தேர் இருப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது – மயில்வாகனம் குடும்பம்.
4.எம்பெருமானுக்கு புதிய சித்திரத்தேர் திருப்பணி வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன – திரு. ந. ஜவகர் லால் நேரு குடும்பம்.
5.ஆலயத்தில் மின்னிணைப்பு வேலைகள் புனரமைக்கப்பட்டு புதிய மின்பிறப்பாக்கி இயந்திரம் பெறப்பட்டுள்ளது – திரு. ஆ. பொ. பரராசசிங்கம் குடும்பம்.
6.ஆலய நாற்புற வீதிகளும் மண் இடப்பட்டு உயர்த்தப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளன.
7.ஆலய சுற்றுக்கொட்டகை வெளிப்புற சுண்ணாம்புச் சுவர் அகற்றப்பட்டு மதில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
8.வருடாவருடம் ஆலயத்தின் உட்பகுதி வர்ணவேலைகள் செய்யப்படுகின்றன.
9.அனைத்து வாகனங்களும் மீள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன.
10.சப்பரம், தேர், புனரமைப்பு வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.
11.ஆலய முன்வாயில் மணிமண்டப வேலைகள் நடைபெறுகின்றன.
12.ஆலயத் தில் பாலஸ் தாபனம் செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வருடந்தோறும் மகோற்சவம் வைகாசி மாத பெளர்ணமி திதியில் தீர்த்தோற்சவம்
வரத்தக்கதாக 11 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. மகோற்சவ
காலத்தில் வரும் அடியார்களுக்கு உதவ திரு.சி.க.குடும்பத்தினர் தாகசாந்தியும்
திரு.ஐங்கரன் அன்னதான சபையால் அன்னதானமும் வருடந்தோறும் தவறாது
வழங்கப்படுகிறது.
மேலும் ஆலய வளர்ச்சியில் ஆலய விஸ்தரிப்புப் பணிகளுக்கு பெருமனதுடன்
உதவியவர்களில் முக்கியமானவர்கள்.
1. முன்பக்கம் – இராசா உபாத்தியாயர்(இரத்தினசபாபதி) பரம்பரை
2. தெற்குப் பக்கம் – பேரம்பலம் பராசக்தி(அப்பாத்துரை) குடும்பத்தினர்
3. மேற்கு – மயில்வாகனம் இராசரட்ணம் குடும்பம்
4. வடக்கு – கந்தையா பாக்கியம் குடும்பம்
5. வடமேற்கு- பொ. சோமசுந்தரம் (கேணியடிவீடு குடும்பம்)
6. முன்வடக்கு – மு. குமாரசுவாமி குடும்பம்
இக் குடும்பங்கள் ஆலய வளர்ச்சிக்கும் விஸ்தரிப்புக்கும் பெரும் பங்காற்றியுள்ளனர். இவர்களுக்கு எல்லோரும் நன்றி கூறவேண்டும்.
எம் பெருமானின் திருவருளாலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் இக்கிராமத்து மக்கள் இன்று செய்து வரும் உதவிகளால் ஆலயம் பல வழிகளில் புதுப் பொலிவு பெற்று வருகின்றது. கனடாவிலும், லண்டன் நகரிலும் இயங்கும் வழிபடுநர் அமைப்புக்கள் இத் திருத்தலத்துக்கு ஆக்கபூர்வமான பல உதவிகளை காலத்துக்குக் காலம் செய்து கொண்டிருக்கின்றன. மேலும் பல திருப்பணி வேலைகள் அன்பர்களின் உதவியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத் திருப்பணி வேலைகள் முற்றுப்பெறும் நிலையிலுள்ளன. இதைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்வதற்கான ஆயத்தங்களில் பரிபாலன சபையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோயிலுக்கு முன்பாக புதியதேர் மண்டபம் அமைக்கும் முயற்சியிலும் பரிபாலன சபையின்ர் ஈடுபட்டுள்ளனர். இம்முயற்சி கைகூட கிராமத்து மக்களிடமிருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தொடர்ந்தும் எம் பெருமானின் ஆலயத்தில் திருப்பணிவேலைகள் நடைபெறவும், எமக்குச் சாந்தியும் சமாதானமும் தொடர்ந்தும் நிலைத்திடவும் எல்லாம் வல்ல பெரிய புலத்தவனின் பாதாரவிந்தங்களைப் பணிந்து போற்றுவோம்.