வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு – 31/05/2018
வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு. இன்றையதினம்(31.5.2018) வேலணை மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் வேலணையிலும் நெடுந்தீவிலும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. வேலணையில் இடம்பெற்ற கருத்தரங்கில் சுமார் 140 மாணவர்கள் கலந்து கொண்டனர். வேலணை மக்கள் ஒன்றியத்தின் சார்பில் அதன் காப்பாளர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு மாணிக்கவாசகர் இளம்பிறையன் அவர்கள் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். அத்துடன் குறித்த கருத்தரங்குக்காக தயாரிக்கப்பட்ட கையேடுகளையும் அவர் வழங்கிவைத்தார்.
நெடுந்தீவில் நடைபெற்ற கருத்தரங்கில் சுமார் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கிற்கு வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு அரசரத்தினம் அவர்களும் உறுப்பினர் திரு நிக்சன் அவர்களும் கலந்து கொண்டனர் இவ்விரு கருத்தரங்குகளுக்கும் அதிபர்கள் ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் கருத்தரங்கு தீவகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.