சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு
வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் மாணவர்கள் பலவருடங்களுக்குப் பின்னர் இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிப்பார்த்ததுடன் அவற்றைபற்றியும் அறிந்துள்ளனர்.
இதுவரைகாலமும் பாடப் புத்தகத்தின் மூலம் தான் அறிந்து கொண்டதை இப்போது நேரில் தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
இக் கல்விச் சுற்றுலாவினால் தாம் பெரிதும் பயணடைந்ததாக சென்று வந்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இக் கல்விச் சுற்றுலாவானது கடந்த 15/04/2017 தொடக்கம் 20/04/2017 நாள்வரைக்கும் நடை பெற்றது. இதை ஒழுங்கு செய்த பாடசாலையின் புதிய அதிபரான திரு ஜெயகரன் அவர்களின் செயற்பாட்டை பாடசாலையின் கல்விச் சமூகம் பாராட்டுகின்றது. அத்துடன் இக்கல்விச் சுற்றுலாவிற்கு நிதியனுசரணை வழங்கிய வர்களான வனபிதா குணளன் தியாகராஜா அவர்களையும் திரு இரத்தினசிங்கம் இரமணன்(கணக்காளர் வேலணை பிரதேச செயலகம்)அவர்களையும் வேலணை மக்கள் ஒன்றியத்தினரையும் வாழ்த்துவதுடன் பாடசாலையின் கல்விச் சமூகத்தினர் நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.
இக் கல்விச் சுற்றுலாவினால் மாணவர்கள் மாத்திரமின்றி ஆசிரியர்களும் பயன் பெற்றுள்ளனர்.
இக்கல்விச் சுற்றுலாவின் போது புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவமான இடங்களின் விபரண தொகுப்பாக வெளியிட உள்ளதாகவும் அவற்றின் மூலம் ஏனைய பாடசாலைகளின் மாணவர்களுக்கும் உதவியாக இருக்கக்கூடியதாக அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.