எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள்.
வேலணை வங்களாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக காணப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் முண்டியடித்து அதிகமான தொகைக்கு பெற்றோல் நிரப்புவதையும் காண முடிந்தது.
பெற்றொலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாகவே பெற்றோலுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்துஇ பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஓரிரு மணி நேரங்களில் நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு (24) முதல் இப்போராட்டம் அமுலுக்கு வருவதாகஇ அவ்வொன்றியத்தின் ஊடக பேச்சாளர் பந்துல சமன்குமார தெரிவித்திருந்த போதிலும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.