வேலணை சரஸ்வதி வித்தியாசாலை
இப்பாடசாலையில் ஆரம்ப, இடைநிலைக் கல்வி கற்ற மாணவர்கள் பிரபல கல்லூரிகளில் கற்று உள் நாட்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, எமது பழைய மாணவர்கள் வைத்திய நிபுணர்களாக, கணக்காளர்களாக, இறைவரித்திணைக்கள உயரதிகாரிகளாக, சுங்கத்திணைக் கள உயரதிகாரிகளாக, சட்டத்தரணிகளாக, பல்கலைக்கழக பேராசிரியர்களாக, விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளாக, பாடசாலை அதிபர்களாக, ஆசிரியர்களாக,
கல்விப்பணிப்பாளராக, அரச அதிபர்களாக, சிறந்த வர்த்தகர்களாக, எழுதுவினைஞர்களாக பணியாற்றியுள்ளனர், பணியாற்றி வருகின்றனர் என்பது பெருமையுடன் றிப்பிடத்தக்கது.
1990 ஆம் ஆணி டுவரை சீரிய முறையில் இயங்கிவந்த இப்பாடசாலை 1991 ஆம் ஆண்டில் எமது கிராமத்தில் மற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் இடம் பெயர்ந்ததன் விளைவாக பாடசாலைச் செயற்பாடுகளில் பின்னடைவும், பாடசாலை வளங்களின் பாரிய அழிவும் ஏற்பட்டன. எனினும் 1996 ஆம் ஆண்டு தொடக்கம் மீண்டும் ாடசாலை தன் சொந்த இடத்தில் இயங்கிவருகின்றது.
இப்பாடசாலையில் கற்ற மாணவர்களிற் பலர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், மிக உயர்ந்த பதவிகளை வகித்துள்ளனர், வகித்து வருகின்றனர். எதிர்காலத்திலும் இந்நிலை தொடர பாடசாலையுடன் சம்பந்தப்பட்ட அனைவரதும் ஆக்கமும், ஊக்கமும், பாடசாலையின் எதிரில் எழுந்தருளியிருக்கும் வேலவனதும், ஞான வைரவரினதும் அருளும் கிடைக்க வேண்டுகிறோம்.