வேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது துறையூர் ஐயனார் அணி.
பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது துறையூர் ஐயனார் அணி.
கடந்த மாதம் 21 ஆம் திகதி அல்லைப்பிட்டி சென்.ஜேம்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அனைத்து தடகள போட்டியின் இறுதிப்போட்டியாக உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் புங்குடுதீவு நசரத் அணியும், வேலணை துறையூர் ஐயனார் அணியும் மோதியதில் துறையூர் அணி தெடர்ந்து இரண்டு வருடங்களாக முதலிடத்தினை பெற்றுள்ளது. இதற்கான வெற்றிக்கிண்ணத்தினை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் செல்லத்துரை காசிலிங்கம் அவர்கள் ஐயனார் அணி சார்பாக பெற்றுக்கொண்டார். இப்போட்டியில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.