தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை
மேலும் இப்பெறுபேறுகள் தேசிய ரீதி, மகாணரீதி, மாவட்ட ரீதி ஆகியவற்றில் 2014 ஆண்டை விட 2015 ஆம் ஆண்டில் சித்தியடைந்தோரின் சதவீதமானது குறைவடைந்துள்ளது. ஆனால் தீவகத்தைப் பொறுத்த வரையில் இப்பெறுபேற்றில் மாற்றம் ஏற்படாது 34 சதவீதமானோரே 2014, 2015 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் சித்தியடைந்துள்ளமை இங்கு அவதானத்திற்குரியது.
மேலும் தீவக கல்வி வலய மாணவரின் க.பொ.த. (உ.த.) பரீட்சைப் பெறுபெறுகளும் மொத்த நாட்டின் பெறுபேற்றுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவாக உள்ளமை நோக்கத்தக்கது. இவ்வாறு பொதுப் பரீட்சைகளில் மாணவர் பெறுபெறுகள் குறைவாகக் காணப்படுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இவ்வாறு இலங்கையில் மாணவர்கள் பொதுப்பரீட்சைகளில் சித்தியடையும் சராசரி நூற்று விதத்திலும் பார்க்க தீவகக் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடங்களில் சித்தியடையும் சதவீதம் மிகக் குறைவாகக் காணப்படுவது பாரிய பிரச்சினையாக உள்ளது.
3.0 நோக்கம்
இந்தப் பின்னணியில் தீவகக் கல்விக் கோட்டத்தில் தற்போது காணப்படும் கல்விநிலையை பொருத்தமான பகுப்பாய்வுகளுடள் முன்வைப்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
4.0 தரவு சேகரித்தல்
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், வடமாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட பல்வேறு தகவல்களை இந்த ஆய்வில் தரவுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தரவுகள் ஆய்வாளரால் நேரடியாகச் சேகரிக்கப்படாத இரண்டாம்நிலைத் தரவுகள் எனலாம்.
5. தீவகக் கல்விவலயத்தின் தற்போதைய நிலை
5.1 பாடசாலைகள்
தீவகக் கல்வி வலயத்தில் மொத்தமாக 77 பாடசாலைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் 13 பாடசாலைகள் பல்வேறு காரணங்களால் தற்போது தற்காலிகமாக இயங்குவதில்லை. இதனால் மாணவர்கள் பாடசாலைக் கலவிக’காக நீண்ட தூரப் பயணம் செய்ய வேண்டியுள்ளது. தற்போது இப்பிரதேசத்தில் இயங்குகின்ற 64 பாடசாலைகளின் விபரம் கோட்ட ரீதியாகவும் பாடசாலை வகைரீதியாகவும் கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
அட்டவணை 2 தீவகக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள்
கோட்டம்/வகை | 1AB | C | I | II | மொத்தம் |
---|---|---|---|---|---|
நெடுந்தீவு | 0 | 3 | 1 | 4 | 8 |
ஊர்காவற்றுறை | 1 | 2 | 6 | 8 | 17 |
வேலணை | 1 | 2 | 11 | 12 | 26 |
காரைநகர் | 2 | 0 | 2 | 9 | 13 |
மொத்தம் | 4 | 7 | 20 | 33 | 64 |
(மூலம்: வடக்கு மாகாண கல்வித் திணைக்கள இணையத்தளம் 2016)
இங்கு காரைநகர்க் கோட்டத்தில் மொத்தமாக 13 பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்த காரைநகர்க் கோட்டத்தினை தீவகக் கல்வி வலயத்திலிருந்து பிரித்தெடுத்து வலிகாமம் கல்வி வலயத்துடன் எதிர்காலத்தில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக அண்மைக் காலப் பத்திரிகைச் செய்திகள் குறிப்பிடுகின்றன.