தரம் 5 மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு
இன்றைய தினம் வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தரம் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு யாழ்.நாரந்தனை றோ.க.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்றது.இதன் முதல பிரதியை ஊர்காவற்றுறைகோட்டக் கல்விப்பணிப்பாளர் மு.சத்தியசீலன் வேலணை மக்கள் ஒன்றியத் தலைவரிடம் இருந்து பொற்றுக்கொண்டார். தொடர்ந்து உறுப்பினரிடம் இருந்துமாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர். இநநிகழ்வினை முன்னெடுத்து நடாத்தியவர்கள் ஊர்காவற்றுறை, வேலணை, நெடுந்தீவு கோட்ட ஆசிரிய ஆலோசகர்கள் ஆவர்.
இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 744 மாணவர்களளும், 2019ல் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 652 மாணவர்களும் இக்கணித, மற்றும் சுற்றாடற் கையேடுகளைப் பெறவுள்ளனர்.