வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் விசேட கருத்தரங்கு
வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரனையுடன் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றமுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நடைபெற்று வருகின்றது.
சென்ற வருடம் வேலணைப்பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கருத்தரங்குகள் இவ்வருடம் தீவகப்பிரதேசமெங்கும் நடைபெறுகின்றன. சிறந்த வளவாளர்களால் நடாத்தப்படும் இவ்வகுப்புக்களுக்கு சுமார் 800 க்கும் அதிகமான மாணவர்கள் பங்கபற்றுகின்றனர். மாணவர்களுக்கான பயிற்சிக்கையேடுகள் வழங்கப்பட்டு முகாம்கள் பின்னூட்டல் வகுப்புக்கள் கருத்தரங்குகள் என்பன தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
17- 05-2018 தினம் ஊர்காவற்றுறை, வேலணை பிரதேசங்களில் தமிழ், கணிதச் செயற்பாடினை ஆரம்பிக்கின்றார்கள்.
18- 05-2018 தினம் புங்குடுதீவுலும் செயற்பாடினை ஆரம்பிக்கின்றார்கள்.