பதியம் கலை விழா- 2019
வேலணையைச் சேர்ந்த கனடா வாழ் வர்த்தகப் பெரு மக்களின் ஆதரவுடன் வேலணை பதியம் நிர்வாகத்தின் சிறப்பான வழிநடத்தலில் நடைபெற்ற இவ் விழாவில் கனடாவில் பல்கலைக்கழகங்களில் புது முக மாணவர்களாய்த் தம் கற்கை நெறிகளைத் தொடங்கி இருக்கும் கனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
கனடா வேலணை மக்கள் ஒன்றியம் நடாத்திய பதியம் கலை விழா- 2019 கடந்த ஐந்தாந் ( 05-01-2019) திகதி சனிக்கிழமை மாலை கனடா ஐயப்பன் கோயில் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தட்டுங்கள். Com நிறுவனர் திரு.பேரம்பலம் சுதாகரனின் வேலணை பற்றிய வாழ்த்துக் கவிதையுடன் பல கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற இவ்விழாவில் கனடா வாழ் வேலணை மக்களில் அதிகமானோர் கலந்து கொண்டு
தம் ஊர் நினைவுகளை மீட்டிச்சென்றனர். இவ்விழா கனடாவில் ஒரு சரித்திரம் படைத்த விழாவாக வெகு சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது