தீவகக் கல்விவலயத்தின் “மாணவர் பாராளுமன்ற அமர்வு” – வேலணை மக்கள் ஒன்றியம் நிதிப்பங்களிப்பு
நாளை (27/10/2017) வேலணை மத்திய கல்லூரியில், தீவகக் கல்விவலயத்தின் “மாணவர் பாராளுமன்ற அமர்வு” நடைபெறவுள்ளது. இவ்வமர்வு சிறப்புற நடைபெறுவதற்காக வேலணை மக்கள் ஒன்றியத்தினால் ரூபா 20,000.00 நிதியுதவி வழங்கப்பட்டுளது. இந்நிதியினை வேலணை மக்கள் ஒன்றியத்தின் சார்பில், அதன் தலைவர் திரு ம. அரசரட்ணம் அவர்கள், தீவகக் கல்விவலயக் கல்விப்பணிப்பாளரிடம் வழங்கினார்.
பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பான அறிவை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு உதவுகின்ற மேற்படி செயற்பாட்டிற்கு வேலணை மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.