பதியம் 2020 கலை மாலைப் பொழுது
கனடா வாழ் வேலணை மக்களே!
கனடா வேலணை மக்கள் ஒன்றியத்தினால் 2019 இல் நடத்தப்பட்ட பதியம் கலை மாலைப் பொழுது மிகச் சிறப்பாக நடந்தேறியது நீங்கள் எல்லோரும் அறிந்த விடயம். அந்த வகையில் 2020 ம் ஆண்டிற்கான பதியம் நிகழ்வும் எதிர்வரும் ஜனவரி மாதம், 04 ம் திகதி நடைபெறவிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
கனடா வாழ் வேலணையூர் வர்த்தகப் பெருமக்களின் பேராதரவுடன் நடந்தேறவிருக்கும் இந்நிகழ்வில், இயல், இசை, நாடகம் என முத்தமிழும் சங்கமிக்கும் நிகழ்வுகள் எம் இளம் சிறார்களால் அரங்கேற்றப்படவிருக்கின்றன.
இந் நிகழ்வானது, இல. 635 Middlefield Road இல் அமைந்துள்ள கனடா ஐயப்பன் இந்து ஆலய மண்டபத்தில், மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி, நடைபெறவிருக்கிறது. இந் நிகழ்வுக்கு, கனடா வாழ் வேலணை மக்கள் அனைவரையும் வருக வருக என் அன்புடன் இரு கரம் கூப்பி வரவேற்கிறார்கள், கனடா வேலணை மக்கள் ஒன்றியத்தினர்.
கனடா வாழ், வேலணை மக்களாகிய நீங்கள் எல்லோரும் இந் நிகழ்வுக்கு வருகை தந்து எமது பண்பாட்டின் பெருமைதனை எமது அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துச் செல்வதற்கும் வழிவகுப்போமாக!
நன்றி
வேலணை மக்கள் ஒன்றியம்
வானொலி விளம்பரம்