பல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் 2019/2020
காலத்தால் என்றுமே அழிக்க முடியாத செல்வம் கல்வி…
அத்தகைய கல்விச் செல்வமானது தாயகத்தில், வேலணையில் வாழும் எம் மாணவ மணிகளுக்கு
தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பது வேலணை மக்கள் ஒன்றியமாகிய எங்களது ஆவல்,
ஆசையும் கூட.
இக் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக,வேலணை மக்கள் ஒன்றியமானது தனது ஆதரவினை, இவ் இளந் தளிர்களுக்கு வழங்கி வருகின்ற விடயம் நீங்கள் எல்லோரும் அறிந்த ஒன்றே.
அந்த வகையில் இந்த வருடமும் இவ் உதவியை நல்கும் வகையில், கனடா வாழ் வேலணை மக்கள்
ஒன்றியமானது கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் வேலணையைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்களின்
கல்விச் செயற்பாடுகளுக்கு உத்வேகம் ஊட்டும் வகையில், சமூக ஆர்வலர்களின் வேண்டுதலுக்கேற்பவும்,
நன் கொடையாளர்களின் அனுசரணையோடும் உயர்தர வகுப்புகளில் அதிகூடிய பெறுபேறுகளைப்
பெற்று பல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
இத்திட்டமானது கனடா மண்ணில் வாழும் இன்றைய இளந்தளிர்கள், எதிர் வரும் காலங்களில் எங்கள்
வேலணைப் பிரதேசத்தின் மாணவச் செல்வங்களின் கல்வித் தரத்தின் வளர்ச்சியில் பங்கேற்பதை
ஊக்குவிக்கும் எனத் திடமாக நம்புகிறோம்.
இப் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப
படிவத்தினைப் பூர்த்தி செய்து vpoglobal@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு,ஒக்டோபர் மாதம் 31 ந் திகதிக்கு முன்னர்
அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது கல்வியே ஆகவே அந்தக் கல்வியை
வளர்ப்பதற்கு துணை நிற்பதில் கனடா வாழ், வேலணை மக்கள் ஒன்றியமாகிய நாம் பெருமை
கொள்வோம் 🙏
Download
Word Format: Application Form
PDF format: Application Form
Scholarship Program