தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை
5.4 க.பொ.த. (உ.த) பரீட்சைப் பெறுபெறுகள்
தீவகக் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து க.பொ.த. (உ.த) பரீட்சைக்கு 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தோற்றியோரை துறைரீதியாக பின்வரும் அட்டவணை … காட்டுகின்றது.
அட்டவணை 9 துறைரீதியாக பரீட்சக்குத் தோற்றிய மாணவர் விபரம்
துறை | 2014 | 2015 | ||
எண்ணிக்கை | சதவீதம் | எண்ணிக்கை | சதவீதம் | |
கலை | 138 | 84.66 | 159 | 77.94 |
வர்த்தகம் | 16 | 9.82 | 35 | 17.16 |
உயிரியல் விஞ்ஞானம் | 4 | 2.45 | 4 | 1.96 |
பௌதீக விஞ்ஞானம் | 5 | 3.07 | 6 | 2.94 |
மொத்தம் | 163 | 100 | 204 | 100 |
(மூலம்: வடக்கு மாகாண கல்வித் திணைக்கள இணையத்தளம் 2016)
இப்பிரதேசத்தில் உள்ள மாணவருள் அதிகமானோர் கலைத்துறைத் பாடங்களையும் மிகக் குறைவான எண்ணிக்கையினர் விஞ்ஞானத்துறைப் பாடங்களையும் கற்பதை இவ் அட்டவணை எடுத்துக் காட்டுகின்றது.
விஞ்ஞானத்துறையில் கற்பதானது கலைத்துறையில் கல்வி கற்பதை விட எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு இலகுவானதாக அமையும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
5.4.1 கலைத்துறைப் பெறுபெறுகள்
கலைத்துறையில் கடந்த இரு வருடங்களாக மாணவர் பெற்ற பெறுபேறுகளை பாடசாலை ரீதியாக கீழுள்ள அட்டவணை சுட்டிக் காட்டுகின்றது.
அட்டவணை 10 : கலைத்துறையில் மாணவர் பெறுபேறுகள்
பாடசாலை | 2014 | 2015 | ||
தோற்றியோர் | பல்கலைக்கழக தகுதி பெற்றோர் |
தோற்றியோர் | பல்கலைக்கழக தகுதி பெற்றோர் |
|
நெடுந்தீவு மகா வித்தியாலயம் | 6 | 6 | 11 | 10 |
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் | 4 | 4 | 4 | 0 |
நெடுந்தீவு றோ.க | 8 | 7 | 6 | 6 |
ஊ. புனித அந்தோணியார் | 16 | 15 | 23 | 19 |
கரம்பன் சிறிய புஸ்பம் | 11 | 9 | 20 | 16 |
நயினாதீவு ம.வி | 12 | 6 | 10 | 7 |
புங்குடுதீவு ம.வி | 8 | 6 | 20 | 10 |
வேலணை ம.க. | 37 | 28 | 34 | 24 |
காரைநகர் இந்துக் கல்லூரி | 22 | 12 | 18 | 15 |
காரைநகர் யுரழ்ரன் | 14 | 9 | 13 | 11 |
மொத்தம் | 138 | 102 | 159 | 118 |
(மூலம்: வடக்கு மாகாண கல்வித் திணைக்கள இணையத்தளம் 2016)
கலைத்துறையைப் பொறுத்த வரையில் தீவகத்திலுள்ள பாடசாலைகளில் கடந்த இரு வருடங்களில் க.பொ.த. (உத) பரீட்சைப் பெறுபெறுகள் ஓரளவு திருப்திகரமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
எனினும் 2014 ஆம் ஆண்டில் காரைநகர் இந்துக் கல்லூரி, நயினாதீவு ம.வி. ஆகிய பாடசாலைகளின் பெறுபேறுகளும் 2015 ஆம் ஆண்டில் நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் பெறுபேறும் கலைத்துறையைப் பொறுத்த வரையில் திருப்த்திகரமாக இல்லையென்றே குறிப்பிட வேண்டியுள்ளது.