வாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.
வருடாந்தம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைபெற்றுவரும் சிறுவர் போட்டியில் இந்த வருடம் நயினாதீவு சிறுவர்களின் குழு நடன பிரிவில் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தினை பெற்றுள்ளது.
மாவட்ட மட்டத்தில் 1 ஆவது இடம்பெற்ற இக்குழு நடனம் தேசிய ரீதியில் கடந்த வாரம் பங்கு பற்றி அங்கு 3 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர். பயிற்றுவித்த ஆசிரியரினையும், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்தரூபன், பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் நகுலராணி அவர்களையும், குழு நடனத்தில் பங்குபற்றிய மாணவர்களையும் காணலாம்.