தரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு
வேலணை மக்கள் ஒன்றியத்தின் செயற்பாட்டின் அங்கமான கல்விப் பிரிவின் வேலைத்திட்டத்தின் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் முன்னோடிப் பரீட்சைக்குரிய வெளியீடு ஒன்றுக்குரிய வினைத்தாள்கள் இன்று 29-03-2017 காலை 10 மணியளவில் தீவகம் வலயக் கல்விப் பணிமனையின் (வேலணை) ஒன்று கூடல் மண்டபத்தில் வைத்து வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு ம.அரசரெத்தினம் அவர்களினால் தீவகம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சு.சுந்தரசிவம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது .
இன்நிகழ்வில் வேலணை நெடுந்தீவு ஊர்காவற்துறை காரைநகர் ஆகிய கேட்டங்களின் கல்விப் பணிப்பாளர்களும் வலயக் கல்விப்பணிமனையின் உதவிக் கல்விப்பணிப்பாளர்களும் இவர்களுடன் ஆசிரிய வளவாளர்களும் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் வேலணை மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் திரு இந்.சிவநாதன் அவர்களும் கலந்து கொண்டு கோட்டங்களுக்குரிய வினாத்தாள்களை கையளித்தார் .இறுதியில் வேலணைக் கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு பொ் சிவானந்தராஜா அவர்களின் நன்றியுரையும் இடம் பெற்றது.
இப்பரீட்சை வினாத்தாள்களை தயாரித்து தந்தவர் யா/வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி சுகந்தி காணடீபன் அவர்களாவார்கள் .
மேலும் இவ் வினாத் தாள்கள் தீவகம் கல்வி வலயத்துக்குட்பட்ட 55 பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 5 வகுப்பை சேர்ந்த 735 மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
இத்துடன் கிளிநொச்சியிலுள்ள ஆதரவற்ற மாணவர்கள் வசிக்கும் மகாதேவா சுவாமிகள் சைவச் சிறுவர்கள் இல்லத்திலுள் தரம் 5இல் கல்வி பயிலும் 19 மாணவர்களுக்கும் இவ் வினாத்தாள்கள் வழங்கப்படவுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னோடிப் பரீட்சையானது 31/03/2017 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என்பதை தீவகவலய கல்விப் பணிமனையினர் அறியத்தருகின்றனர்.