பிரமிள் விருது – 2018
“வேலணை.Com” (கனடா) இன்
நிதி அனுசரணையில்
“தட்டுங்கள்.Com” (கனடா) இன்
ஊடக பங்களிப்புடன்
“மகுடம்” கலை இலக்கிய
சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் ஆண்டு தோறும் வழங்கவிருக்கும்
“பிரமிள் விருது”ம்
பிரமிள் நினைவுப் பேருரைத் தொடரும்.
20-04-2019 இல் அமுத விழா காணும் நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கு பின் மிகப் பெரும் இலக்கிய ஆளுமையாக கருதப்படும் உலகம் போற்றும் தமிழ் கவிஞர் பிரமிள் என அழைக்கப்படும் தர்மு சிவராம் நினைவாக கவிதைக்கு வழங்கப்படவிருக்கும் ” பிரமிள் விருது”
தொடர்பான அறிவிப்பும் நிபந்தனைகளும்.
# உலகெங்கும் வாழும் தமிழ் கவிஞர்கள் அனைவரும் இப் போட்டியில் பங்கு பற்ற முடியும்.
# இவ் விருதுக்காக கவிஞர்கள் 01-01-2018 தொடக்கம் 31-12-2018 வரையான காலப் பகுதியில்
வெளியிட்ட தமது கவிதை நூலை/நூல்களை சமர்ப்பிக்கலாம்.
# போட்டிக்கு கவிதை நூலின் மூன்று (3) பிரதிகள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
# ஒருவர் குறித்த காலப் பகுதியில் வெளியிட்ட எத்தனை கவிதை நூல்களையும் போட்டிக்கு அனுப்பலாம்.ஆனால் ஒவ்வொரு நூலிலும் தனித்தனியே மூன்று பிரதிகள் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
# கவிஞர்கள் சார்பாக பதிப்பகங்களும் கவிதை நூல்களை விருது தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம்.ஆனால் பரிசு கவிஞருக்கே வழங்கப்படும்.
# போட்டிக்கு சமர்ப்பிக்கப்படும் நூல்/நூல்கள் குறித்த (2018) ஆண்டில் முதல் பதிப்பு கண்ட நூலாக இருக்க வேண்டும்.
# கவிதைகள் தமிழில் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.மொழிபெயர்ப்பு ,பிற மொழி தழுவல்,பல கவிஞர்களின் தொகுப்பாக இருக்கக்கூடாது.
# போட்டி இறுதித் திகதி 05-03-2019. இத் திகதிக்கு பின்னர் கிடைக்கும் நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
# முடிவுகள் அனைத்தும் 10-04-2019 அன்று அறிவிக்கப்படும்.
# நூல்கள் வந்து சேரவேண்டிய
தபால் முகவரி :
w.michael Collin
The Editor of Magudam
90, Bar Road,
Batticaloa,
Sri Lanka.
Phone: 0774338878
E.mail: magudammichael@gmail.com
# தேர்வான கவிதை நூலுக்கு விருதும் ,பணப்பரிசாக இலங்கை ரூபா 40000/= மும் , சான்றிதழும்
சிறப்புப் பரிசாக பத்து(10) கவிதை நூல்களுக்கு சான்றிழும்
20-04-2019 அன்று நடைபெறவிருக்கும்
பிரமிள் விருது விழா நிகழ்வில் வழங்கப்படும்.
# ஆசியர் – மகுடம்