வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை
வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு பாடசாலையின் தேவை கருதி மூன்று மாடிக்கட்டடமொன்றை அமைப்பதற்காக திட்டவரைபடமொன்றை வரைவதற்கான செலவாக ரூபா Rs.75000 வேலணை மக்கள் ஒன்றியம் அனுசரணை நிதியாக வழங்கியுள்ளது. இந்நிதியை வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு அரசரத்தினம் அவர்கள் இத்திட்ட வரைபடத்தை வரைந்துதவிய KMAS Engineering Contractors நிறுவனத்தின் முகாமையாளரிடம் பாடசாலை அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.
சமூக மற்றும் மாணவர் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் வேலணை மக்கள் ஒன்றியம் மாணவர்களின் கற்றல் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்குடன் இந்நிதியன்பளிப்பை வழங்கியுள்ளது.