வடமாகண ஆளுனர் தலைமையில் வேலணை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்
இடம் : வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபம்
காலம் : 05.12.2018
நேரம் : பிற்பகல் 2.30 – 5.00 மணிவரை
வேலணை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் வடமாகண ஆளுனர் தலைமையில் வேலணை பிரதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஆளுனரின் செயலாளர்,திணைக்களத்தின் தலைவர்கள்,பிரதேச சபை தலைவர்,உறுப்பினர்கள்,அரசஉயர்அதிகாரிகள்,விரிவுரையாளர்கள்,பொது அமைப்புக்களின் தலைவர்,செயலாளர்கள் என 300 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆளுனர் குறிப்பிடுகையில் ஐரோப்பா நாட்டு சுற்றுப்பயணம் செய்த பொழுது அங்கு உள்ள எமது உறவுகள் இங்குள்ள உறவுகளுக்கு நிதி உதவி செய்வதாக கூறினர். கல்விபணிப்பாளர் குறிப்பிடுகையில் 5ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரீட்சையில் 2017,2018 இம்முறை 16 வீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்று புள்ளி விபரத்துடன் எடுத்து கூறினர். வேலணை மக்கள் ஒன்றிய தலைவர் குறிப்பிடுகையில் கனடாவில் வாழும் எமது உறவுகளின் நிதி பங்களிப்புடன் தீவகம் தழுவிய ரீதியில் புலமைப் பரீட்சை கருத்து அரங்குகளையும் செயல் அமர்வுகளையும் நடத்தி 2017 ஆண்டை விட இவ்வாண்டில் மேலும் 16 வீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் மேலும் அனைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும் எனில் சித்தி வீதத்தை கூட்டமுடியும். ஆளுனர் குறிப்பிடுகையில் பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளார். எனவே மாணவர்களின் கல்வி வீதம் கூட்ட முடியாது என்று கூறினார் மற்றைய பிரதேசங்களில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என எடுத்து கூறும் பொழுது ஒன்றிய தலைவர் அவர்களினால் பாடத்திற்குரிய ஆசிரியர்கள் பற்றாகுறையினாலும் கல்வி பின் தங்கி உள்ளது. அதற்கு ஆளுனர் செயலாளர் பதிலளிக்கையில் அதிபர்கள்,ஆசிரியர்களை இன்னொரு கூட்டத்திற்கு அழைத்து தீர்வை பெற்று தருமாறு கூறினர். அத்துடன் விவசாயம்,குடிநீர்,சுகாதாரம்,வீட்டுவசதிகள் பிற விடயங்கள் சம்பந்தமாக ஆராயப்பட்டதுடன் ஆளுனர் கனடா,சுவிஸ்,லண்டன் என்று இல்லாமல் எல்லோரையும் ஒன்றினைத்து தீவக அபிவிருத்தியை முன்னேற்றமடையும் என கூறினர் .