கண்ணீர் காணிக்கை – சதாசிவம் மாணிக்கவாசகர்
கண்ணீர் காணிக்கை
வேலணை மண்ணுக்கு புகழ்சேர்த்த வேலணையின் பெருமைக்குரிய மனிதர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி எம்மை பெரும் துயரில் ஆழ்த்தியது, அமரர் மாணிக்கவாசகர் அவர்கள் வேலணையின் வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டது மட்டுமல்லாமல் கல்வி,பொருளாதாரம் மற்றும் பல்துறைசார் விடயங்களிலும் வேலணை முன்னேறவேண்டுமென அயராது உழைத்தவர் அது மட்டுமன்றி அத்துறை சார்ந்தவர்களையும் ஊக்கிவித்த ஊர்பற்றாளன் அத்தோடு இவரது முயற்ச்சியால் வேலணை ஓர் வரலாற்று அறிமுக நூலின் முதலாவது பதிவு வெளிவந்தது இதன் இரண்டாவது பதிவு வெளிவர இருந்த நிலையில் அன்னார் இறைவனடி சேர்ந்து விட்டார் . கடந்த ஆண்டு வேலணை மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள் அன்னாரை சந்தித்தபோது நூலின் விபரங்களை பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் இரண்டாவது பதிவினை கனடாவில் வேலணை மக்கள் ஒன்றியம் வெளியிடவேண்டும் என கேட்டுக்கொண்டார். மாணிக்கவாசகரின் இழப்பு வேலணை மண்ணுக்கு பேரிழப்பாகும்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லா எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றோம்.
வேலணை மக்கள் ஒன்றியம்