தீவக வலய ஆசிரியர் திருமதி வனஜா குகதாஸனுக்கு வழங்கப்பட்ட பிரதீபா பிரபா விருது – 2022.
யா.வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தில் கடமையாற்றி தற்போது யா.அல்லைப்பிட்டி றோ.க.த.க. வித்தியாலயத்தில் பணியாற்றும் திருமதி வனஜா குகதாசன் ஆசிரியர் அவர்கள் தேசிய ரீதியில் சிறந்த ஆரிசிரியர் வரிசையில் தெரிவு செய்யப்பட்டு குரு பிரதீபா பிரபா விருது – 2022 பெற்றுக்கொண்டுள்ளார்.
இவ்விருதானது மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 அதிபர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் விருது பெறுவோருக்குரிய பாடசாலைகளுக்கான பண்புத்தர பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 10000 ரூபா பெறுமதியான நிதித் தொகையும் வழங்கப்படுகின்றது. தீவக வலயத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி விருது வென்ற ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.