ஸ்ரீ முருகன் வெற்றிக்கிண்ணம் 2024 கிரிக்கட் தொடர் – ii
வேலணை மேற்கு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையமும், ஸ்ரீ முருகன் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய தீவக ரீதியான கிரிக்கட் போட்டி கடந்த 17,18,19 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அல்லைப்பிட்டி சென்.பிலிப்ஸ் விளையாட்டுக்கழகமும், ஊர்காவற்றுறை காவலூர் சிறுத்தைகள் அணியும் மோதியிருந்தனர். இறுதிப்போட்டியில் காவலூர் சிறுத்தைகள் அணி வெற்றி பெற்றது. 30 அணிகள் மோதிய விலகல் முறையிலான போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் வேலணை பிரதேச செயலர், கிராம உத்தியோகத்தர்கள், வேலணை மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் மற்றும் அப்பிரதேச தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அனுசரணையாளர்கள் பலர் முன்வந்து 1 ஆம் 2 ஆம் இடங்களுக்கான பரிசில் தொகைகளையும் பரிசில்களையும் வழங்கியிருந்தனர்.
மேலதிக புகைப்படங்களுக்கு https://adsmanager.facebook.com/adsmanager/manage/all?nav_source=comet&nav_entry_point=comet_bookmark&campaign_id=415838275119884&placement=bkmk_admgr&extra_1=campaign