வேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்
காலப்போக்கில் இப்பாடசாலை அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. பின்னர் ஒலைக் கொட்டகையாக இருந்த பழைய கட்டிடங்கள் அழிக்கப்பட்டு புதிய கட்டிடங் கள் அமைக்கப்பட்டன. இப்பாடசாலையில் பல உபாத்தியாயர்கள் கடமையாற்றியுள்ளார்கள்.
திரு. அப்பாத்துரை உபாத்தியாயர்
திரு. சரவணமுத்து உபாத்தியாயர்
திரு. ஏரம்பு உபாத்தியாயர்
செல்வி. பண்டிதை. த. வேதநாயகி
திரு. சாம்பசிவ உபாத்தியாயர்
திரு. சோமசுந்தர உபாத்தியாயர்
மாதகல் வைத்தியலிங்க உபாத்தியாயர்
இவர்கள் ஆரம்பகாலத்தில் கடமை யாற்றியவர்களில் சிலராவர். இவர்கள் வரிசையில் தலைமையாசிரியர், அதிபர்கள் பலர் பல்வேறு காலத்தில் கடமையாற்றி யுள்ளார்கள். அவர்களை பின்வருமாறு பட்டியல் படுத்தலாம்.
1. திரு. செ. கனகசபாபதி(இராஜா உபாத்தியாயர்)
2. திரு. க. சிவஞானசம்பந்தன்
3. திரு. பொ. பொன்னுச்சாமி
4. திரு. க. கனகரத்தினம்
5. திருமதி. செ. கந்தசாமி
6. திரு. வ. நல்லையா
7. திரு. கு. சரவணபவானந்தன்
8. திரு. இ. ஞானசோதியன்
ஆரம்பத்தில் தரம் 1 – 5 வரை மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன. பின்னர்
படிப்படியாக வகுப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. தற்போது க. பொ. த. (சாத) வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. 1960களில் விசுவலிங்கம் ஆசிரியர், தருமலிங்கம் ஆசிரியர், பொன்னுக்கோன் ஆசிரியர், முருகேசுப்பிள்ளை ஆசிரியர், திருமதி. சிவயோகம் மகாலிங்கம், இராமலிங்கப்பிள்ளை ஐயர், நடராஜா ஆசிரியர், திரு. சு. ஏரம்பு ஆசிரியர்,திரு. பேரம்பலம் ஆசிரியர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.