“தீவக தீபம்” – பண்டிதர் க.சிவலிங்கம், பிரசித்த நொத்தாரிசு
வேலணை மத்திய மகாவித்தியாலயத்தை எந்த இடத்தில் நிறுவுவதென நிர்ணயிப்பதில் பல வாக்குவாதங்கள் ஏற்பட்ட போது அது தீவுப்பகுதி முழுவதற்கும் பொதுவான ஒன்றாதலால், அது இப்பொழுது இருக்குமிடத்தில் நிறுவப்பட வேண்டுமென்றும் அது தான் சகல தீவுகளுக்கும் பொதுவான இடமென்றும் அவர்கள் காரணங் காட்டிய போது அரசினர் அவர்களது கூற்றை ஏற்று அவ்விடத்திலேயே நிறுவினார்கள். அவ்வித்தியாலயம் கட்டப்படும் காலத்திலும், அதன் பின்னரும் அதனை மேற்பார்வையிடும் ஓர் உப முகாமையாளர் போன்று கல்விப் பகுதியார் அவர்களை அங்கீகரித்தனர். அவர்களது தூய்மையான முயற்சியினால் அவ்வித்தியாலயம் கண்கவர் காட்சியோடமைந்தது. அம் மகா வித்தியாலயம் இனிமேல் அவர்களுக்கமைந்த ஒரு நினைவுச் சின்னமாக மிளிர்ந்து கொண்டிருக்கும்.