சேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்
சேர். வை. துரைசுவாமி அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஜீன் மாதம் எட்டாம் திகதி வேலணையில் பிறந்தார். இலங்கை வரலாற்றில் அழியாத இடம் பெற்றுள்ள தலைவர்களில் ஒருவர் . நாட்டு மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட நற்றமிழர் . அவர் ஒரு தேசாபிமானி ,சைவாபிமானி ,சிறந்த வழக்கறிஞர் , சமுகத்தொண்டர் ,கல்விக்கூடங்கள் பலவற்றின் தாபகர் ,சைவ வித்தியா விருத்திச் சங்கம் ,சைவ பரிபாலனசபை ,யாழ்ப்பாணச் சங்கம் ஆதியாம் நிறுவனங்களின் தலைவர்.
“நாட்டு மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட நற்றமிழர்”இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக 1936 முதல் 1947 வரை விளங்கிய ஒரே தமிழ்மகன் . ஆறாம் ஜோர்ச் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னரால் அழைக்கப்பெற்று “சேர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர் .1936 முதல் 1947 வரை இலங்கையின் முதல் பிரசையாக விளங்கிய பெருமைக்குரியவர் . இலங்கை அரசியல் அரங்கில் 1920 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை முதனிலை வகித்த பெருந்தகை .
நாட்டின் விடுதலைக்கு அஞ்சாது குரல் கொடுத்த அரசியல்வாதி . சிறந்த ஆன்மீகவாதி . யோகர் சுவாமிகளின் பேரன்புக்குரியவர் .இத்தகு சிறப்புக்கள் அனைத்தும் ஒருங்கமைந்த பெருமகன்தான் வேலனைத் தாயின் தவப்புதல்வன் சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி.
நன்றி