வேலணை மக்கள் ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டு ஆசிரியராக கடமையாற்றிவந்த திருமதி.அருந்தவராசா ஜெசிந்தா காலமாகிவிட்டார்
வேலணை மக்கள் ஒன்றியத்தினால், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு, யா/வேலணை செட்டிபுலம் அ.த.க பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிவந்த, வேலணை அம்பிகைநகர் கண்ணாபுரத்தைச்சேர்ந்த திருமதி. அருந்தவராசா ஜெசிந்தா அவர்கள், திடீர் சுகவீனமடைந்து இன்று (13.10.2017) அதிகாலை காலமான செய்திகேட்டு ஆழ்ந்த துயருற்றிருக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அவருடைய இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரின் பெற்றோர், கணவர், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வேலணை மக்கள் ஒன்றியத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (13.10.2017) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.