தொடர் சம்பியனாகியது துறையூர் ஐயனார் விளையாட்டுக்கழக அணி.
வேலணை பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் தடகள மற்றும் பெருவிளையாட்டுப்போட்டியில் துறையூர் ஐயனார் அணி உதைபந்தாட்டப்போட்டியில் தொடர் சம்பியனை பெற்றுள்ளது.
வேலணை பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியானது கடந்த மாதம் புங்குடுதீவு சண்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் துறையூர் ஐயனார் அணியினை எதிர்த்து புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டுக்கழகம் மோதியது இதில் 2.0 என்ற கோல் கணக்கில் துறையூர் ஐயனார் அணி வெற்றிபெற்றது. ஐயனார் அணி சார்பாக விதுசன், கோகுலன் தலா ஒவ்வொரு கோல்களைப்போட்டனர்.