ஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெற்றுவந்த கருத்தரங்கு கடந்த 28-7-2018 நடைபெற்ற கருத்தரங்குடன் நிறைவுபெற்றது இக்கருத்தரங்கில் யா.நாரந்தனை றோ.க.மகாவித்தியாலய ஆசிரியர் திரு கலாமோகன் வளவாளராக கலந்துகொண்டார் சுமார் 130 க்குமதிக மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.
அன்றையதினம் வேலணை மக்கள் ஒன்றியத்தலைவர் திரு அரசரத்தினம் தலமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் வேலணை மத்திய்கல்லூரி முன்னாள் ஆசிரியரும் பலாலி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி ஓய்வுநிலை பிரதி அதிபருமான திரு.கனகநாயகம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினார் தொடர்ந்து மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்கள் வேலணை மக்கள் ஒன்றியத்தின் சேவைக்கு நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினர் இறுதியாக வேலணை மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் திரு.ப.காண்டீபன் நன்றியுரை நிகழ்த்தினார். தொடர்ந்து பொதுப்புகைப்படம் எடுக்கப்பட்டதுடன் சிற்றுண்டிகளில் உபசரணை வழங்கப்பட்டு கருத்தரங்கு இனிதே நிறைவுபெற்றது