அன்பாலோர் பூமி செய்வோம் !
வேடங்களை களைந்துவிட்டு
பாசங்களை அணியுங்கள்…குரோதங்களை அழித்துவிட்டு
உள்ளன்பைப் பகிருங்கள்…உள்ளமதை தூய்மை செய்து
உண்மைதனை நிரப்புங்கள்…நீ பெரிது நான் பெரிது நீக்கி
ஒற்றுமையோடு கூடுங்கள்…பகைமைகள் உதிர்ந்த காட்டில்
நட்புப் பயிரை விதையுங்கள்…போர்க்கால வானம் கலைத்து
அன்பு மழைக்கு வேண்டுங்கள்…அன்பாலோர் பூமி செய்வோம்
அமைதிக்காய் பிரார்த்தியுங்கள்…
– வேலணையூர் ரஜிந்தன்.
03.05.2019