வேலணை பிரதேச விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான விவசாய சேகரிப்பு நிலையம் [படங்கள் இணைப்பு]
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் நேரடி உதவி நிகழ்ச்சித்திட்டக் கொடை மூலமான நிதி உதவியுடன் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன், வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பங்களிப்புடனும்
வேலணை பிரதேச விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான
விவசாய சேகரிப்பு நிலையமானது 19.02.2021 அன்று 11.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. வேலணை வங்களாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க்ததின் கட்டடப் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட நிலையத்திற்கு பிரதம விருந்தினராக வேலணை பிரதேச செயலர் அவர்களும் ஏனைய பிரதேச நிர்வாக அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். படங்கள் இணைப்பு.