பதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது
வேலணை மக்கள் ஒன்றியம் – கனடா நடத்தும் பதியம் கலைவிழா ஜனவரி மாதம் 5ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கனடா ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது என்பதனைப் பேருவகையுடன் அறியத் தருகின்றோம்.
வேலணையைச் சேர்ந்த கனடா வாழ் வர்த்தகப் பெருமக்களின் ஆதரவுடன் நடைபெறவிருக்கும் இக்கலைவிழாவில், கனடாவில் பல்கலைக்கழகங்களில் புதுமுகமாணவர்களாய்த் தம் கற்கைநெறிகளைத் தொடங்கியிருக்கும் கனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப் பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
கனடாவாழ் வேலணை மக்கள் அனைவரையும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்து ஊர் நினைவுகளை மீட்டுச்செல்லும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
வேலணை மக்கள் ஒன்றியம் – கனடா