பதியம் 2020 – கலை மாலைப் பொழுது
“முதற்கண் ஓர் அரிய மேடையை எம்சிறார்க்கும் எமக்கும் அளித்து விட்டு தூரே நின்று அழகு பார்த்த அத்தனை பதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் எம் தலைசாய்ந்த வணக்கங்கள்.
உங்கள் தன்னலமற்ற உயர்நோக்கம் கொண்ட செயற்பாடுகளைக் இக் குறள் ஒன்றே விளக்குகிறது
“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும்.”
அதாவது தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.
உங்களுடைய செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது என்பதே உண்மை. உங்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியமும் கிடைத்து உங்கள் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற இறைஅருள் வேண்டி வாழ்துகிறோம்
திரு.திருமதி கதிர்காமநாதன்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.”
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. அந்த வகையில் பதியம் 2020 ற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
வேலணை மக்கள் ஒன்றியம்- கனடா நிர்வாக குழுவிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்!!
இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்தமைக்கு முதலில் கடவுளிற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல
வருமா என்ற பாடலுடன் வந்து போன எம்
ஊரின் அழகிய காட்சிகள் இன்னமும் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றது.
சிற்றுண்டி உபசரிப்பு, இராப் போசனம் என்பன எமது தமிழரின் பண்பாட்டில் ஒன்றான விருந்தோம்பலை மேலும் ஒரு படி உயர்த்தி விட்டது.
இளம் சந்ததியினருக்கு பாராட்டு அளித்து அவர்களை ஊக்கப் படுத்திய விதம் அழகு. வளர்ந்து வரும் எம் இளம் சந்ததியினருக்கு வழங்கிய புலமைப்பரிசில் திட்டமும் அதன் விளக்கமும் என்னை மிகவும் கவர்ந்து கொண்டது. வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி மென் மேலும்.
தாய் மண்ணின் பெருமையையும், அழகையும், பசுமையையும் சுவாசித்ததாக ஓர் ஆனந்தம். மீண்டும் ஒரு முறை வேலணை மக்கள் ஒன்றியம்- கனடா நிர்வாகஉறுப்பினருக்கும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!! – சசி தனேஸ்