வேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்
இவ்வித்தியாலயத்தின் ஸ்தாபகர்கள் சைவம், தமிழ் ஆகிய இரண்டையும் முக்கியப்படுத்தி அதன் அடிப்படையில் கல்வி இலக்குகளாகக் கொண்டு கடமை
ஆற்றினார்கள். கால மாற்றங்களுக்கு ஏற்பகல்வியின் நோக்கங்களும் மாற்றமுற்று
செல்கின்றன. இப்பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் இன்னமும் வினைத்திறன் மிக்க ஒரு பாடசாலையாக இதை மாற்ற வேண்டும். பெளதிக வள விருத்திகளுடன் மட்டும் திருப்தியடைந்து விடாது சமூகத்தில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி அடைவுகளை மேலும் விருத்தியாக்கும் வகையில்
செயற்பாடுகளை பயனுறுதிமிக்க வகையில் ஆற்ற வேண்டும்.
சமூகம் எதிர் பார்க்கின்ற நன்மைகளை அடைந்துகொள்வதற்கு பயனுறுதி வாய்ந்த ஒரு பாடசாலையாக மாற்றுவதற்கு இவ்வித்தியாலய சமூகம் உழைக்க வேண்டும். அப்போது தான் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும். கல்வி அடைவுகளை உயர்த்துவதற்கு பொருத்தமான மாற்றுத் திட்டங்களை செயற்படுத்த வேண்டும். அத்துடன் சமய, பண்பாட்டு ஒழுக்க நெறிகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை வளர்த்தெடுப்பதற் கேற்ப இணைக்கலைத்திட்ட செயற்பாடு
களிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
— ஓய்வுபெற்ற அதிபர் திரு.இ. ஞானசோதியன் —
வேலணை ஒரு வரலாற்று அறிமுகம் நூலிலிருந்து
நன்றி நூலகம்.