வேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்
அண்மைக் காலம்
1970, 1980 களில் பாடசாலை பெளதிக வள விருத்தியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பழைய கட்டடங்கள் இடித்து அழிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் தோற்றம் பெற்றன. பாடசாலை வளவின் வடக்குப் பக்கத்தில் 1975 இல் 120 x20 கட்டடம் அமைக் கப்பட்டது. இதில் அதிபர் அலுவலகம் உட்பட வகுப்புகள் இருந்தன. பின்னர் கிழக்கு எல்லையில் 120 x 20 இன்னொரு கட்டடம் அமைக்கப்பட்டது. 1991 இல் புலப்பெயர்விற்கு முன்னர் இந்த இரண்டு கட்டடங்கள் மட்டுமே இருந்தன.
1991 இல் வேலணையில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக பாடசாலையும் புலம் பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் சில காலம் இயங்கியது. 995 தென்மராட்சிக்கான யாழ்ப்பாண இடப்பெயர்வின் போதும் இடம் பெயர்ந்து தென்மராட்சியிலும் இயங்கியது. 1996 இன் மீள்குடியமர்வின் போது ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும். 1996 ஏப்பிரல் மாதத்தில் இப்பாடசாலை மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. மாணவர் வரவு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. மீளக்குடியமர்வின் போது ஆரம்பத்தில் 35 மாணவர்கள் வருகை தந்தனர். படிப்படியாக மாணவர் தொகை அதிகரித்து இன்று 380 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். 14 ஆசிரியர்களும் கடமையாற்றுகிறார்கள்.
2000 ஆம் ஆண்டில் உலக வங்கி உதவியுடன் பொதுக் கல்வி சுற்று நிரூபத்தின் அடிப்படையில் 40 x 20’ அளவுடைய நவீன நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது. தற் போது பாடசாலையின் முன்பக்கத்தில் 90 x 25′ நீளமான இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
ஜி. ரி. சற் நிறுவன பங்களிப்புடன் மலசலகூடத் தொகுதிகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. புதிய நீர்த்தாங்கி ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. புளியங்கூடல் மகாமாரி அம்மன் ஆலய அறங்காவலர் திரு. து. சிவஞானச்செல்வம் அவர்களால் இது அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.