வேலணை மேற்கு சிற்பனை ஸ்ரீ முருகன் சனசமூக நிலையமும், விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்திய எங்கட பொடியள் – எங்கட கிரிக்கெட் போட்டி நிகழ்வுகள்.
வேலணை மேற்கு சிற்பனை ஸ்ரீ முருகன் சனசமூக நிலையமும், ஸ்ரீ முருகன் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்திய வேலணை மேற்கு ஊர் உறவுகளின் சங்கமம் ஸ்ரீ முருகன் பிறீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை 18.09.2022 அன்று சனசமூக நிலையத் தலைவர் சி.அருட்சுதன் தலைமையில் கேணிக்கரை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கனடா வாழ்.சிற்பனை மண்ணின் மைந்தன் திரு கை.பார்த்தீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ முருகன் ஆலய பொருளாளர் திரு.லயன் கு.கங்கைவேணியன், அவர்களும், பெரிய புலம் மகா கணபதிப் பிள்ளையார் ஆலய தலைவரும், ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளருமான திரு.பொ.அருணகிரிநாதன் அவர்களும், சிற்பனை முருகன் ஆலய உப தலைவர் திரு.தி.சீவரெத்தினம் அவர்களும், பெரியபுலம் மகா கணபதி பிள்ளையார் ஆலய பொருளாளர் திரு.கு.மகேந்திரன் அவர்களும், உப தவிசாளர் திரு.பொ.நடனசிகாமணி அவர்களும், வேலணை பிரதேச சபை கௌரவ உறுப்பினர் சி.அசோக்குமார் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
கௌரவ விருந்தினர்களாக சிற்பனை முருகன் அன்னதான சபை தலைவரும் வேலணை சுப்பர் கிங்ஸ் அணி உரிமையாளருமான திரு.ப.பாலசிறிதரன், விஜிதா அரிசி ஆலை உரிமையாளரும், விஜிதா வோரியஸ் அணி உரிமையாளருமான திரு.யோ.பிரசாந்தன் அவர்களும், வேலணை ஃபயர் போய்ஸ் அணி உரிமையாளர் திரு.பொ.பிரணசொரூபன் (தவம்) குடும்பத்தினரும், சசி ரான்ஸ் போட் உரிமையாளரும், வேலணை வோரியஸ் அணியின் உரிமையாளருமான திரு.கு.செந்தூரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.