பொறியியல் பீட மாணவனுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் வேலணை 7 ம் வட்டாரத்தைச்சேர்ந்த தற்போது மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்விபயின்றுவரும் திரு தர்மராசா கலைராஜ் என்னும் மாணவனுக்கு அவரது உயர்கல்விக்கு உதவிபுரியும் வகையில் மடிக்கண்ணி (laptop) வழங்கப்பட்டது.தர்மராசா கலைராஜ் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயின்று தொடர்ந்து யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் க.பொ.த உயர்தர வகுப்பில் கல்விகற்று மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்துக்கு தெரிவாகியிருந்தார் . இன்றையதினம் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் வேலணை மக்கள் ஒன்றியத்தைச்சேர்ந்த உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் பாடசாலையின் அதிபர் செல்வி வாசுகி அவர்கள் மாணவனுக்கு மடிக்கண்ணியை வழங்கிவைத்தார். தர்மராசா கலைராஜ் மேன்மேலும் கல்வியில் உயர்வடைய வேலணை மக்கள் ஒன்றியம் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.